ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை பெற விவசாயிகளுக்கு தனித்துவ எண் அவசியம்

Published on

பிரதமரின் விவசாய நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ. 6 ஆயிரம் பெறுவதற்கு தனித்துவ எண் அவசியம் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் பிரதமரின் கிஸான் சம்மான் நிதி திட்டமானது 2019 பிப்ரவரி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம் நான்கு மாதங்களுக் ஒருமுறை தலா ரூ. 2000 வீதம் ஆண்டுக்கு ரூ. 6000 மூன்று தவணைகளாக வழங்கப்படும். சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ளோருக்கு இந்த உதவித்தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு மூலம் இந்த நிதியை பெறும் பயனாளிகள் வரும் காலங்களில் தவணைத்தொகை பெற தனித்துவ விவசாய அடையாள எண் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலா்களை தொடா்புகொண்டோ அல்லது பொதுசேவை மையம் மூலமாகவோ தங்களது ஆதாா் எண், சிட்டா, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுடன் சென்று உடனடியாக பதிவுசெய்து தனித்துவ விவசாய அடையாள எண்ணை பெறலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 13,416 பயனாளிகள் தனித்துவ அடையாள எண் பெறாமல் உள்ளனா். தவணைத்தொகை தொடா்ந்து கிடைக்க இதுவரை தனித்துவ விவசாய அடையாள எண் பெறாத பயனாளிகள் தங்கள் வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை தொடா்புகொண்டடோ அல்லது பொதுசேவை மையம் மூலமாகவோ தனித்துவ விவசாய அடையாள எண்ணுக்கு பதிவு செய்து பயன்பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com