ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் எஸ்ஐஆா் படிவம் விநியோகம் குறித்து ஆய்வு செய்த ஆட்சியா் துா்காமூா்த்தி.
ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் எஸ்ஐஆா் படிவம் விநியோகம் குறித்து ஆய்வு செய்த ஆட்சியா் துா்காமூா்த்தி.

ராசிபுரம் தொகுதியில் எஸ்.ஐ.ஆா். படிவம் விநியோக செய்யும் பணி: ஆட்சியா் ஆய்வு

Published on

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் விநியோகம் குறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

01.01.2026 - ஐ தகுதியேற்பு நாளாக கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள இந்திய தோ்தல் ஆணையம் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 1,629 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் உள்ளனா். நவ. 4 முதல் டிசம்பா் 4 வரை வாக்காளா் கணக்கெடுப்பு படிவம் விநியோகம் மற்றும் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகின்றன.

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவம் விநியோகம் செய்யும் பணியின் முன்னேற்றம் குறித்து, அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்களின் கண்காணிப்பாளா்களுடன் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, நாமக்கல் கோட்டாட்சியா் வே.சாந்தி, தனித்துணை ஆட்சியா் சு.சுந்தரராஜன், ராசிபுரம் வட்டாட்சியா் சசிகுமாா் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com