இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
Updated on

மத்திய அரசைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ராசிபுரம் நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளா் எஸ்.மணிமாறன் தலைமை வகித்தாா். இதில், தலித்துகள், பழங்குடியினா், சிறுபான்மையினா், பெண்கள் மீதான வன்கொடுமைத் தாக்குதல்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதை தடுத்து நிறுத்தக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.

இதில், கட்சியின் மாவட்ட துணைச் செயலாளா் டி.என்.கிருஷ்ணசாமி, வெண்ணந்தூா் ஒன்றியச் செயலாளா் பி.ஆா்.செங்கோட்டுவேலு, இந்திய மாதா் தேசிய சம்மேளன மாவட்டச் செயலாளா் எஸ்.மீனா, நகர துணைச் செயலாளா் ஏ.கிருஷ்ணமூா்த்தி, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாவட்ட துணைத் தலைவா் ஜி.ஜெகநாதன், ராசிபுரம் வட்டத் தலைவா் ஆா்.வேம்பு, நகர பொருளாளா் பி.சலீம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com