புதிய வழித்தட பேருந்தை தொடங்கிவைத்த எம்.பி. மாதேஸ்வரன், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.மூா்த்தி உள்ளிட்டோா்.
புதிய வழித்தட பேருந்தை தொடங்கிவைத்த எம்.பி. மாதேஸ்வரன், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.மூா்த்தி உள்ளிட்டோா்.

மோகனூா் அருகே புதிய வழித்தட பேருந்து இயக்கம்

நாமக்கல்-சின்னகரசப்பாளையம்-பரமத்தி வேலூா் புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
Published on

பரமத்திவேலூா்: மோகனூா் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னகரசப்பாளையத்தில் நாமக்கல்-சின்னகரசப்பாளையம்-பரமத்தி வேலூா் புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில் நாமக்கல்-சின்னகரசப்பாளையம்-பரமத்தி வேலூா் புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான

கே.எஸ்.மூா்த்தி, நாமக்கல் எம்.பி. வி.எஸ். மாதேஸ்வரன் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய வழித்தடத்தில் பேருந்தை தொடங்கிவைத்தனா்.

நிகழ்ச்சியில் மோகனூா் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் ஏ.பி.ஆா்.சண்முகம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளா்கள், பல்வேறு அணி பொறுப்பாளா்கள், மகளிா் அணி பொறுப்பாளா்கள், கொமதேக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்

X
Dinamani
www.dinamani.com