கடன் பிரச்னையால் தொழிலாளி தற்கொலை

பரமத்தி வேலூா் அருகே கடன் பிரச்னையால் தொழிலாளி தற்கொலை
Published on

பரமத்தி வேலூா் அருகே கடன் பிரச்னையால் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.

பரமத்தி வேலூரை அடுத்த பாண்டமங்கலம் திரௌபதி அம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (37), வண்ணம் பூசும் தொழிலாளி. இவருக்கு வேலை இல்லாததால் பல இடங்களில் தனது தேவைக்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தாா்.

இந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி விஷம் அருந்தினாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து ராஜ்குமாரின் தந்தை வரதராஜ் அளித்த புகாரின்பேரில் வேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com