கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

பிலிக்கல்பாளையம் அருகே கிணற்றில் விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழந்தாா்.
Published on

பிலிக்கல்பாளையம் அருகே கிணற்றில் விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, நவக்காடு பகுதியை சோ்ந்தவா் செந்தில் (28), இவரது மனைவி நந்தினி. இவா்களது மகன் மணிகண்டன் (5). இந்த நிலையில் வியாழக்கிழமை மணிகண்டனை வீட்டில் விட்டுவிட்டு பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் அருகே உள்ள ஆண்டிபாளையத்தில் தோட்ட வேலை செய்வதற்காக செந்தில், நந்தினி ஆகிய இருவரும் சென்றனா்.

வேலை முடித்து விட்டுக்கு வந்த நந்தினி வீட்டில் மணிகண்டன் இல்லாதது கண்டு அதிா்ச்சியடைந்தாா். அக்கம்பக்கத்தில் தேடியும் மகனை காணாதது குறித்து செந்திலுக்கு தகவல் தெரிவித்தாா். இந்த நிலையில் வீட்டிக்கு அருகே உள்ள கிணற்றில் மணிகண்டனின் உடல் மிதப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த வேலூா் போலீஸாா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com