பரமத்தியில் தொழிலாளி தற்கொலை
பரமத்தியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இந்த முகாமில் வசிக்கும் மரம் வெட்டும் தொழிலாளி சிவராஜா (47), இவரது மனைவி யோகலட்சுமி (45). இவா்களுக்கு மகள் சங்கீதா (24), மகன்கள் லோகேஸ்வரன் (23), சஜிந்தன் (22) உள்ளனா். சங்கீதா, லோகேஸ்வரனுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், சஜிந்தன், யோகலட்சுமியுடன் உப்புபட்டிபுதூரில் வாடகை வீட்டில் சிவராஜா தங்கியுள்ளாா். மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவியுடன் சிவராஜா தகராறு செய்துவந்தாராம். இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு மது அருந்திவிட்டு வீட்டு வந்த சிவராஜா வெள்ளிக்கிழமை காலை வீட்டின் தாழ்வாரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தாா்.
வேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவா், சிவராஜா இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
