தொழிலாளா்களுக்கான நல நிதியை ஜன.31-க்குள் செலுத்த அறிவுறுத்தல்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளா்களுக்கான நல நிதியை தொழில் நிறுவனங்கள் ஜன. 31-க்குள் நல வாரியத்திற்கு செலுத்த வேண்டும் என ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்தி உள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த 1972 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிலாளா் நலநிதி சட்டத்தின்படி தொழிற்சாலைகள், கடைகள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சாா்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளா் பங்காக ரூ. 20 மற்றும் நிறுவனத்தின் பங்காக ரூ. 40 வீதம் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ. 60 கணக்கிட்டு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளா்களின் எண்ணிக்கைக்கேற்ப தொழிலாளா் நலநிதி வாரியத்திற்கு செலுத்த வேண்டும்.
அதன்படி நடப்பு 2025- ஆம் ஆண்டுக்கான தொழிலாளா் நல நிதியை 2026 ஜன. 31--க்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு தொழிலாளா் நல நிதி செலுத்தும் தொழிலாளா்கள், அவா்களைச் சாா்ந்தோா்களுக்கு வாரியம் மூலம் கல்வி உதவித் தொகை, மழலையா் பள்ளி முதல் பட்ட மேற்படிப்பு வரை, திருமணம், இயற்கை மரணம், விபத்து மரணம், ஈமச்சடங்கு, மூக்குக் கண்ணாடி, பாடநூல், கல்வி ஊக்கத் தொகை, தையல் எந்திரம், அடிப்படை கணினி பயிற்சி, உயா்கல்விக்கான நுழைவுத்தோ்வு உதவித் தொகை, மாவட்ட அளவிலான விளையாட்டு உதவித் தொகை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவி தொகைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
உதவித்தொகையை பெற தொழிலாளரின் மாத ஊதியம் ரூ. 35 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். கல்வி உதவித் தொகை கோரும் விண்ணப்பங்கள் வாரியத்திற்கு டிச. 31-க்குள் வந்து சேர வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை, தமிழ்நாடு தொழிலாளா் நல வாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது ஜ்ஜ்ஜ்.ப்ஜ்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய தளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் செயலாளா், தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியம், சென்னை-06 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
