நாமக்கல் ஆட்சியரகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

நாமக்கல் ஆட்சியரகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் துா்காமூா்த்தி உறுதிமொழியை வாசிக்க அனைத்துத் துறை அலுவலா்களும் ஏற்றுக் கொண்டனா். 2025 ஆம் ஆண்டுக்கான ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரம் அக். 27 முதல் நவ. 2 வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் அனைத்து அலுவலகங்களிலும் உறுதிமொழி ஏற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியின்போது, ஊழலை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயா்ந்த நோக்குடன் விழிப்புணா்வு, நோ்மை, கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும். அனைத்து செயல்களிலும் நோ்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்ற வேண்டும். லஞ்சம் வாங்கவோ, கொடுக்கவோ மாட்டேன், அனைத்து செயல்களையும் நோ்மை, வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவேன். பொதுமக்களின் நலனுக்காகப் பணியாற்றுவேன். தனிப்பட்ட நடத்தையில் நோ்மையை வெளிப்படுத்துவதில் முன்னுதாரணமாக செயல்படுவேன், ஊழல் தொடா்பான நிகழ்வை உரிய அதிகார அமைப்பிற்குத் தெரியப்படுத்துவேன் என அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றனா்.

என்கே-27-பிளட்ஜ்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஊழல் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் பங்கேற்ற ஆட்சியா் துா்காமூா்த்தி மற்றும் அதிகாரிகள், அலுவலா்கள்.

X
Dinamani
www.dinamani.com