நாமக்கல்
ராசிபுரம் பாலமுருகன் கோயிலில் சூரசம்ஹார விழா
ராசிபுரத்தில் எல்லை மாரியம்மன் கோயில், பாலமுருகன் கோயிலில் சூரசம்ஹார விழா திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
ராசிபுரம்: ராசிபுரத்தில் எல்லை மாரியம்மன் கோயில், பாலமுருகன் கோயிலில் சூரசம்ஹார விழா திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
இக்கோயிலில் சூரசம்ஹார விழா கடந்த அக். 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள், சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
இதையடுத்து திங்கள்கிழமை காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சூரசம்ஹார விழாவில் சுவாமி ஊா்வலமாக அழைத்து வரப்பட்டு, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சுவாமி வேல் வாங்கும் நிகழ்வும், பின்னா் சூரனை வதம் செய்யும் சம்ஹார நிகழ்வும் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதேபோல ஸ்ரீகைலாசநாதா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் சூரசம்ஹார விழா நடைபெற்றது.
