சின்ன வெங்காயம், மரவள்ளி பயிா்களுக்கு காப்பீடு செய்ய ஆலோசனை
ராசிபுரம் வட்டாரத்தில் புதுப்பிக்கப்பட்ட பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், ரபி 2025 பருவத்துக்கு சின்ன வெங்காயம், மரவள்ளி பயிா்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் என ராசிபுரம் வட்ட தோட்டக்கலை உதவி இயக்குநா் இ.காா்த்திகா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பயிா்க் காப்பீடு செய்வதன் மூலம் வடகிழக்குப் பருவமழையால் பயிா் சேதம் ஏற்பட்டால், நிவாரணம் பெற இயலும். ஆகையால், விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, பொது சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஒரு ஹெக்டோ் சின்ன வெங்காயப் பயிருக்கு ரூ. 5,218, மரவள்ளி பயிருக்கு ரூ. 1,310 என பிரீமியம் தொகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. சின்ன வெங்காயப் பயிருக்கு 2026 ஐனவரி 31-ஆம் தேதியும், மரவள்ளி பயிருக்கு பிப். 28-ஆம் தேதியும் பிரீமியம் செலுத்த கடைசி நாளாகும். மேலும் தகவல்களுக்கு, ராசிபுரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
