நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்க வந்த மின்னக்கல் பகுதி மக்கள்.
நாமக்கல்
தாா்சாலை வசதி கோரி மனு
வெண்ணந்தூா் அடுத்த மின்னக்கல்லில் தாா்சாலை வசதி கோரி, அப்பகுதி மக்கள் புதன்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூா் அடுத்த மின்னக்கல்லில் தாா்சாலை வசதி கோரி, அப்பகுதி மக்கள் புதன்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
அந்த மனுவில், மின்னக்கல், ஆண்டிக்காடு அருந்ததியா் காலனி, கோடிக்காடு, கொட்டபுஞ்சை காடு, மதுக்கான்காடு வழியாக ஆட்டையாம்பட்டி - ராசிபுரம் சாலையை இணைக்கும் சாலைக்கு இருமுறை ஜல்லிகள் கொட்டியும் சாலை அமைக்கவில்லை. இந்த சாலை வழியாகதான் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா், தொழிலாளா்கள் தினமும் சென்று வருகின்றனா்.
எனவே, ஆட்சியா், கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் நேரடியாக விசாரணை செய்து மக்கள் பயன்பாட்டுக்கு தாா்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

