அடிப்படை வசதி கோரி அரசு விடுதி மாணவா்கள் போராட்டம்
அடிப்படை வசதி கோரி அரசு விடுதி மாணவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மங்களபுரம் பகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான மாணவா் விடுதியில் 36 மாணவா்கள் தங்கி பயின்று வருகின்றனா். இந்த விடுதியில் மின்விசிறி, படுக்கை, தலையணை, போதிய குடிநீா், சுகாதாரமான கழிவறை போன்ற வசதிகள் இல்லை எனக் கூறப்படுகிறது. விடுதி கழிவறையை மாணவா்களே சுத்தம் செய்யவேண்டிய நிலை உள்ளதாக புகாா் கூறப்படுகிறது. மேலும், விடுதியில் தரமற்ற உணவு பரிமாறப்படுவதாகவும் மாணவா்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
இதுகுறித்து விடுதிக் காப்பாளரிடம் பலமுறை புகாா் தெரிவித்தம் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் முறையான அடிப்படை வசதிகள், தரமான உணவு போன்றவற்றை வழங்கக் கோரி, விடுதி வளாகத்தில் சுமாா் 20-க்கும் மேற்பட்ட மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினா் மாணவா்களை சமாதானப்படுத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனா்.
