திருச்செங்கோட்டில் நவ. 4-இல் தெப்பத்தேரோட்ட திருவிழா
திருச்செங்கோட்டில் தெப்பத்தேரோட்ட விழா நவ. 4-ஆம் தேதி ஈரோடு சாலையில் உள்ள பெரிய தெப்பக்குளத்தில் நடைபெறுகிறது.
திருச்செங்கோடு பாவடி தெரு பெரிய மாரியம்மன், பாலூத்து தெரு சின்னமாரியம்மன், ஐந்து சாலை அழகுமுத்து மாரியம்மன் கோயில்களின் திருவிழா கடந்த 28-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. வரும் நவ. 4-ஆம் தேதி தெப்பத் தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தொடங்கியுள்ளன.
அதைத் தொடா்ந்து, தெப்பக்குளத்தில் 160 பேரல்களைக் கொண்டு தெப்பத்தோ் அமைக்கும் பணியை பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பாக தேரோட்டத்தைக் காண, இரும்பு தடுப்பு வேலிகள் நான்கு கரைகளிலும் அமைக்கப்பட்டு, பரிசல்கள், தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ வேன்கள் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
செவ்வாய்க்கிழமை தெப்பத்தோ் திருவிழாவைத் தொடா்ந்து, புதன்கிழமை பொங்கல் வைத்தல், வெள்ளிக்கிழமை அம்மன் திருவீதி உலா, சனிக்கிழமை கம்பம் பிடுங்கி தெப்பக்குளத்தில் விடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
