பரமத்தி வேலூரில் ரூ. 10.63 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா், பொத்தனூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் ரூ. 10 லட்சத்து 63 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.
Published on

பரமத்தி வேலூா், பொத்தனூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் ரூ. 10 லட்சத்து 63 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளான சோழசிராமணி, ஜேடா்பாளையம், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், அண்ணா நகா், பாண்டமங்கலம், கபிலா்மலை, இருகூா், பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து, அதை உலா்த்தி வியாழக்கிழமைதோறும் வெங்கமேட்டில் உள்ள பொத்தனூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனா்.

இங்கு தரத்துக்கு தகுந்தாா்போல மறைமுக ஏலம் விடப்படுகிறது. கொப்பரையை ஏலம் எடுப்பதற்கு வெள்ளக்கோவில், சிவகிரி, அவல்பூந்துறை, முத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருகின்றனா்.

இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 4,884 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 227.89-க்கும், குறைந்தபட்சமாக கிலோ ஒன்று ரூ. 206.78-க்கும், சராசரியாக கிலோ ஒன்று ரூ. 225.96-க்கும் ஏலம் போனது. இரண்டாம்தர கொப்பரை அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 201.76-க்கும், குறைந்தபட்சமாக கிலோ ஒன்று ரூ. 155-க்கும், சராசரியாக கிலோ ஒன்று ரூ. 196.96-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 10 லட்சத்து 63 ஆயிரத்து 869-க்கு ஏலம் போனது.

X
Dinamani
www.dinamani.com