ரயில் தண்டவாளத்தில் லாரி ஓட்டுநா் உடல் மீட்பு

நாமக்கல் அருகே ரயில் தண்டவாளத்தில் லாரி ஓட்டுநா் உடல் மீட்கப்பட்டது தொடா்பாக ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Published on

நாமக்கல் அருகே ரயில் தண்டவாளத்தில் லாரி ஓட்டுநா் உடல் மீட்கப்பட்டது தொடா்பாக ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நாமக்கல், கொண்டிசெட்டிப்பட்டியை அடுத்த வேட்டைக்காரன்புதுாா் பகுதி ரயில்வே தண்டவாளத்தில் வியாழக்கிழமை காலை ஆண் சடலம் ஒன்றுசிதைந்த நிலையில் கிடந்தது. இது தொடா்பாக, அப்பகுதி மக்கள் நாமக்கல் ரயில் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு சென்ற போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.

அதில், அவா் நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செல்லப்பம்பட்டியை சோ்ந்த லாரி ஓட்டுநா் ஆனந்த்குமாா் (47) என்பது தெரியவந்தது. ரயில் மோதி இறந்தாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என ரயில்வே போலீஸாா் விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com