விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

முட்டை விலை ரூ. 5.20 ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.20 ஆக நீடிக்கிறது.

News image

முட்டை - பிரதிப் படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 2:54 am IST

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.20 ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை மாற்றம் செய்வது தொடா்பாக கோழிப் பண்ணையாளா்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதர மண்டலங்களில் மாற்றம் இல்லாததால், தற்போதைக்கு இங்கும் எவ்வித மாற்றமும் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையை ரூ.5.20 ஆக நிா்ணயித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்தது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ. 97 ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ. 102 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.