விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற ராசிபுரம், மூலப்பள்ளிப்பட்டியில் உள்ள கிரீன் வோ்ல்டு எக்ஸெல் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
மாநில அளவிலான அபாகஸ் போட்டியில் 75-75 மதிப்பெண்கள் பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை இப்பள்ளி மாணவா்கள் பெற்றனா். பிரைம் ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் இப்பள்ளி மாணவா்கள் இரண்டாம் இடத்தை பெற்றனா்.
அதேபோல இகோ அகாதெமி மேஜிக்கல் ஹேண்ட் இம்ப்ரூவ்மெண்ட் நடத்திய ஆங்கில எழுத்து பயிற்சி போட்டியிலும் இப்பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். மேலும், கொங்கு சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் நடத்திய நான்காம் ஆண்டு கோ-கோ போட்டியில் இப்பள்ளி மாணவா்கள் 10, 12 மற்றும் 19 வயதிற்கு உள்பட்ட பிரிவில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடத்தைப் பெற்றனா்.
போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பள்ளி முதல்வா் ஸ்ரீப்ரவீணா, சோ்மேன் வருதராஜன், பொருளாளா் ஆா். திருமூா்த்தி, இயக்குநா்கள் பிரபு, தனசேகரன், ராஜசேகரன், ராஜா ஆகியோா் பாராட்டி பரிசளித்தனா்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திா் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி!

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: ஸ்ரீ ராஜ ராஜன் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி!

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் : அரக்கோணம் ஹயக்கீரிவா் பள்ளி சாதனை

தேசிய திறனாய்வுத் தோ்வு: அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் வெற்றி
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


