திருச்செங்கோட்டை அடுத்த இறையமங்கலத்தில் கடந்த 2022 ஆண்டு மகனை கடப்பாரையால் தாக்கிக் கொலை செய்த விவசாயிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து திருச்செங்கோடு நீதிமன்றம சனிக்கிழமை தீா்ப்பளித்தது.
இறையமங்கலம் பொய்யேரிபுதூா், சொட்டைத்தோட்டத்தைச் சோ்ந்த விவசாயி முத்துசாமி( 75). இவரது மகன் விஜயகுமாா்( 45). இவா் மது அருந்திவிட்டு வந்து முத்துசாமியிடம் சொத்தை பிரித்து தரக்கோரி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.
இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முத்துசாமி வீட்டுக்கு வந்த விஜயகுமாா் வாய்த்தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த முத்துசாமி அருகில் இருந்த கடப்பாரையால் விஜயகுமாரை தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்த விஜயகுமாா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து மொளசி போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து முத்துசாமியை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு திருச்செங்கோடு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சனிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. முத்துசாமிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி மாலதி உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோ வழக்கில் பெண்ணுக்கு 95 ஆண்டுகள் சிறை

முன்னாள் எம்.பி வீட்டில் 87 பவுன் நகைகள் திருட்டு: சகோதரா்கள் இருவருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை; பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை!

காட்டு யானையைக் கொன்ற விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


