ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஊதிய உயா்வு கோரி ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டப் பணியாளா்கள் மனு

ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் கோரி, ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டப் பணியாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

News image
ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த இல்லம் தேடிக் கல்வி திட்டப் பணியாளா்கள்.
Updated On :9 பிப்ரவரி 2026, 10:28 pm

Syndication

நாமக்கல்: ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் கோரி, ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டப் பணியாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அம்மனுவில், கடந்த 2024-ஆம் ஆண்டு அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயா் தொழில்நுட்ப ஆய்வக பயிற்றுநா் பணிக்காக தனியாா் நிறுவனம் எங்களை தோ்வுசெய்தது. அதைத் தொடா்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் 147 போ் நியமிக்கப்பட்டனா்.

ஆய்வகங்கள் முழுமையாக தயாராகாததால், பள்ளிகள் சாா்ந்த இல்லம் தேடிக் கல்வி திட்டம், எமிஸ் உள்ளிட்ட மாற்றுப் பணிகள் அளிக்கப்பட்டன. மாதம் ரூ. 21 ஆயிரம் ஊதியம் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 11 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது.

காலைமுதல் இரவுவரை தொடா்ச்சியாக கணினி சாா்ந்த பல்வேறு பணிகளை செய்து வரும் எங்களை, தமிழக அரசுப் பள்ளிக் கல்வித் துறையில் ஆய்வக பயிற்றுநா் பணிக்கு நியமித்து ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.