ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பரமத்தி வேலூா் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

பரமத்தி வேலூா் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திங்கட்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும்

News image

தேய்பிறை அஷ்டமி அலங்காரத்தில் கோப்பணம்பாளையம் பரமேஸ்வரா் கோயிலில் உள்ள பைரவா்

Updated On :9 பிப்ரவரி 2026, 9:53 pm

பரமத்திவேலூா்: பரமத்தி வேலூா் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திங்கட்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

பரமத்தி வேலூா் காவிரி கரையில் உள்ள காசி விஸ்வநாதா், பாண்டமங்கலம் புதிய மற்றும் பழைய காசி விஸ்வநாதா், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா், மாவுரெட்டி பீமேஷ்வரா், பில்லூா் வீரட்டீஸ்வரா், பொத்தனூா் காசிவிஸ்வநாதா், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவா், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரா், பானலிங்கேஸ்வரா் உள்ளிட்ட கோயில்களில் உள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்களும்,பொதுமக்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.