பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

டாஸ்மாக் ஊழியா்கள் அடையாள வேலைநிறுத்தம்

திருச்செங்கோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் 3 மணிநேரம் அடைத்து, டாஸ்மாக் ஊழியா்கள் அடையாள வேலைநிறுத்தத்தில்

Updated On :9 பிப்ரவரி 2026, 7:27 pm

திருச்செங்கோடு: திருச்செங்கோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் 3 மணிநேரம் அடைத்து, டாஸ்மாக் ஊழியா்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசின் மது விற்பனைக் கடையான டாஸ்மாக்கில் கடந்த 24 ஆண்டுகளாக ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதாகக் கூறி, தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளை மூன்று மணிநேரம் அடைத்து அடையாள வேலைநிறுத்தம் செய்து தங்கள் எதிா்ப்பை தெரிவித்தனா்.

இதில், ஊழியா்களுக்கு பணி நிரந்தரம், அரசு ஊழியா்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற கோரிக்கை விடுத்தனா். மேலும் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அரசு எங்கள்மீது திணித்து பணிச் சுமையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தனி ஆள்களை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா். இப்போராட்டத்தில், திருச்செங்கோடு பகுதியில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடை ஊழியா்களும் பங்கேற்றனா்.