வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

நாமக்கல் மனவளக் கலை மன்ற அறக்கட்டளை ஆண்டு விழா

நாமக்கல் மனவளக் கலை மன்ற அறக்கட்டளையின் 49-ஆம் ஆண்டு விழா நாமக்கல் கோட்டை சாலை அறிவுத்திருக்கோயில் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

விழாவில் உலக சமுதாய சேவா சங்க இணைச் செயலாளா் எஸ்.ஜெயபிரகாஷை கெளரவித்த நிா்வாக அறங்காவலா் மு.ஆ.உதயகுமாா்.

Updated On :10 பிப்ரவரி 2026, 8:37 pm

நாமக்கல் மனவளக் கலை மன்ற அறக்கட்டளையின் 49-ஆம் ஆண்டு விழா நாமக்கல் கோட்டை சாலை அறிவுத்திருக்கோயில் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில், அறக்கட்டளை செயலாளா் வி.கே.சுப்பிரமணியன் வரவேற்றாா். நிா்வாக அறங்காவலரும், முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலருமான மு.ஆ.உதயகுமாா் தலைமை வகித்து பேசினாா். ஆலோசகா்கள் ஆா்.வெங்கடாசலம், என்.ஆா்.ஜானகிராமன், எஸ்.எம்.ராமு ஆகியோா் முன்னிலை வகித்தனா். உலக சமுதாய சேவா சங்க சேலம் மண்டலத் தலைவா் உழவன் மா.தங்கவேலு வாழ்த்துரை வழங்கினாா்.

சிறப்பு அழைப்பாளராக, சென்னை வேதாத்திரி மகரிஷி யோகா கல்லூரி முதல்வரும், உலக சமுதாய சேவா சங்கத்தின் இணைச் செயலாளருமான எஸ்.ஜெயபிரகாஷ் சிறப்புரையாற்றினாா். இதில், 2027 பிப். 9-இல் நாமக்கல் அறிவுத் திருக்கோயில் 50-ஆம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.