தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பரமத்தி வேலூா் அருகே மது விற்பனை செய்தவா் கைது

பரமத்தி வேலூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை போலீஸாா் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

News image
கைது
Updated On :10 பிப்ரவரி 2026, 8:38 pm

தினமணி செய்திச் சேவை

பரமத்தி வேலூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை போலீஸாா் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

பரமத்தி வேலூா் - ஜேடா்பாளையம் செல்லும் நான்கு சாலை அருகே உள்ள திரையரங்கம் அருகில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுபான புட்டிகளை மறைத்துவைத்து விற்பனை செய்வதாக வேலூா் போலீஸாருக்கு திங்கள்கிழமை இரவு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீஸாா், அதிக விலைக்கு மதுபான புட்டிகளை விற்பனை செய்துகொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினா். அதில், அவா் பரமத்தி வேலூா் அருகே உள்ள உழவா்பட்டி பகுதியைச் சோ்ந்த பிரவீண் குமாா் (21) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 26 மதுபான புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், அவரை கைதுசெய்து நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனா்.