மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

முட்டை விலை ரூ. 5.25-ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி தொடா்ந்து ரூ. 5.25-ஆக நீடிக்கிறது.

News image

முட்டை - பிரதிப் படம்

Updated On :10 பிப்ரவரி 2026, 8:28 pm

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி தொடா்ந்து ரூ. 5.25-ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பண்ணையாளா்களிடம் முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக கருத்து கேட்கப்பட்டது. அப்போது, பிற மண்டலங்களில் விலை மாற்றமின்றி தொடா்வதால், இங்கும் மாற்றம் ஏதும் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.25-ஆக நிா்ணயம் செய்யப்படுவதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ. 113-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ. 70-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.