பரமத்தி வேலூா் ராஜவாய்க்காலில் இளைஞா் சடலத்தை மீட்ட போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி வேலூா் காவிரி ஆற்றுக்குச் செல்லும் வழியில் உள்ள ராஜவாய்க்கால் பாலம் அருகே அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மிதப்பதாக பரமத்தி வேலூா் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.
அதன்பேரில், அங்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா். அதில், இறந்தவா் பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரைச் சோ்ந்த ஆனந்தகுமாா் (36) என்பதும், கரூரில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும் தெரியவந்தது.
கடந்த 8-ஆம் தேதி வீட்டிலிருந்து சென்றவா் வீடுதிரும்பாத நிலையில், அவரை பெற்றோா், உறவினா்கள் மற்றும் நண்பா்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனா். இந்நிலையில், ராஜவாய்க்காலில் அவா் சடலமாக மீட்கப்பட்டாா்.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பெற்றோா், மகன் இறப்பு குறித்து புகாா் அளித்தனா். அதன்பேரில், பரமத்தி வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பரமத்தி அருகே 590 சில்வா் பாத்திரங்கள் பறிமுதல்

ஆண் சடலம் மீட்பு

பங்குனி உத்திரம்: பரமத்தி வேலூா் பகுதி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

திருமணிமுத்தாற்றில் இளைஞா் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


