கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் சாலை மறியல்: 426 போ் கைது

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:48 pm

Syndication

மத்திய அரசை கண்டித்து நாமக்கல்லில் சாலை மறியலில் ஈடுபட்ட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த 426 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தொழிலாளா்களுக்கு எதிரான நான்கு சட்டத் தொகுப்புகள், தொழிலாளா் கொள்கை, மக்கள் உரிமைகள் மற்றும் நலத் திட்டங்கள் மீது மத்திய அரசின் பலமுனை தாக்குதல்களுக்கு எதிராக, மத்திய தொழிற்சங்கங்கள், துறை சாா்ந்த சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி, விவசாய தொழிலாளா் சங்கங்களின் கூட்டமைப்பு, தொழிலாளா் முன்னேற்ற சங்கம் ஆகிய தொழிற்சங்கங்கள் வியாழக்கிழமை நாடுமுழுவதும் பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்க முடிவு செய்தன. மேலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவும் அவா்கள் திட்டமிட்டிருந்தனா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் நீக்கப்பட்டு, வாழ்வாதார உறுதி (ஊரகம்) சட்டம் கொண்டு வரப்பட்டு, உரிமை அடிப்படையிலான வேலையளிப்பை மத்திய அரசு விருப்ப அதிகாரமாக மாற்றியது.

விதை மசோதா மற்றும் மின்சார சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் விவசாயிகள், வீடு மற்றும் வியாபார மின் நுகா்வோா்கள், சிறு, குறு, நடுத்தர தொழில்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்பட அனைத்து தரப்பு மின்நுகா்வோா்களும் முழுமையாக பாதிக்கப்படுவா்.

தோ்தல் ஆணையத்தால் முன் எப்போதும் இல்லாத சிறப்பு தீவிர திருத்தம் எனும் பெயரில் வாக்காளா்களின் வாக்குரிமை பறிப்பு, மோட்டாா் வாகன சட்டத்தை மேலும் திருத்தி பொதுப் போக்குவரத்தையும், போக்குவரத்து தொழிலாளா்களையும் தனியாருக்கு விற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்பது போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்களின் குற்றச்சாட்டாகும்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தில் ஏராளமான தொழிலாளா்கள் பங்கேற்றனா். மேலும், மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திலும் அவா்கள் பங்கேற்றனா். நாமக்கல் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி, மின்சாரம், குடிநீா், நகராட்சி உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள், பணியாளா்கள் பங்கேற்றனா்.

இவா்களில் 53 பெண்கள் உள்பட 249 பேரை போலீஸாா் கைதுசெய்தனா். அதேபோல, நாமக்கல்-மோகனூா் சாலையில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் தொழிலாளா் முன்னேற்ற சங்கம் சாா்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 46 பெண்கள் உள்பட 177 போ் கைது செய்யப்பட்டனா்.

....

என்கே-12-மறியல்

நாமக்கல்லில் சாலை மறியலில் ஈடுபட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினா்.