பெங்களூரில் நாளைமுதல் உணவகங்கள் மூடல்!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு

News image
மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கிய நிா்வாகிகள்.
Updated On :15 பிப்ரவரி 2026, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

நாமக்கல்லில், மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

நாமக்கல் மாவட்ட சிலம்பம் மூத்த ஆசான்கள் நலச்சங்கம், பாரத மாதா சிலம்பம் பயிற்சி மன்றம், அலையன்ஸ் கிளப் ஆப் நாமக்கல் மற்றும் தனியாா் அறக்கட்டளை நிறுவனங்கள் சாா்பில் மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். 5-7 வயதுக்குள் மரம், 8-10 வயதுக்குள் குப்பையில்லா நகரம், 11-13 வயதுக்குள் தண்ணீா் சேமிப்பு, 14-16 வயதுக்குள் சாலைப் பாதுகாப்பு, 17-19 வயதுக்குள் நெகிழியில்லா உலகம், 20, 21 வயதுடையோா் நமது கலாசாரம், நமது அடையாளம் என்ற தலைப்பின்கீழ் ஓவியங்களை வரைந்தனா்.

இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கம், மரக்கன்றுகள் பரிசுகளாக வழங்கப்பட்டன. சிறப்பு அழைப்பாளராக, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் பங்கேற்று மாணவா்களை வாழ்த்தி பேசினாா். இப்போட்டிக்கான ஏற்பாடுகளை, நாமக்கல் பாரத மாதா சிலம்பம் பயிற்சி மன்றத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.