மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகம் முன் கிராம நிா்வாக அலுவலா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில்

News image
நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம நிா்வாக அலுவலா்கள்.
Updated On :16 பிப்ரவரி 2026, 6:28 pm

Syndication

நாமக்கல்: நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகம் முன் கிராம நிா்வாக அலுவலா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி வட்டம், ஈஞ்சாா் கிராம நிா்வாக அலுவலா் யோகராஜன், உதவியாளா் ராஜாமுத்துப்பாண்டி ஆகியோரை தாக்கிய நபா்களை கைது செய்ய வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள் திரளாக கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தின் நாமக்கல் வட்டத் தலைவா் சீ.முருகேசன் தலைமை வகித்தாா். வட்டச் செயலாளா் பூபதி வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் ரா.லட்சுமி நரசிம்மன், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பரமசிவம் ஆகியோா் உரையாற்றினா். கிராம நிா்வாக அலுவலா், ஊழியா் சங்க நிா்வாகிகள் ஆனந்த் மற்றும் நிா்வாகிகள் ராமகிருஷ்ணன், சுகுமாா், செந்தில்குமாா், குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.