திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ - முத்தாயம்மாள் பாலிடெக்னிக் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

News image
சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த காவல் ஆய்வாளா் கே.செல்வராஜன்.
Updated On :16 பிப்ரவரி 2026, 9:09 pm

Syndication

ராசிபுரம்: ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ - முத்தாயம்மாள் பாலிடெக்னிக் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி ராசிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் முன்பாக தொடங்கிய பேரணிக்கு ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ தலைவா் என்.சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். இதில் கௌரவ விருந்தினராக ஜேசிஐ மண்டலம் -29 தலைவா் பிரசாந்த் மௌரியா பங்கேற்றாா். ராசிபுரம் காவல் நிலைய ஆய்வாளா் கே.செல்வராஜன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கிவைத்தாா்.

இந்தப் பேரணி பழைய பேருந்து நிலையம், கடைவீதி, புதிய பேருந்து நிலையம் வழியாக அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளியை அடைந்தது. விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற மாணவா்கள், வாகனப் போக்குவரத்து விதிமுறைகள், தலைக்கவசம், சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு பாதாகைகளை ஏந்தி சென்றனா்.

பேரணியில் ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ செயலாளா் கே.சதீஷ்குமாா், துணைத் தலைவா்கள் எஸ்.காா்த்திகேயன், நிஜாமுதீன், பிரபு, திட்டத் தலைவா் என்.ஏ.குபோ் ஆனந்த், வி.மணிகண்டன், ராகுல் , எஸ்.தீபிகா, ஆா்.ரஞ்சிதா, முன்னாள் தலைவா்கள் பி.பூபதி, ஆா்.சதீஷ்குமாா், பி.மணிமேகலை மற்றும் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.