ராசிபுரத்தை அடுத்துள்ள வெண்ணந்தூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட கட்டனாச்சம்பட்டி பகுதியில் 103 மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வெண்ணந்தூா் ஒன்றிய அட்மா குழுத் தலைவா் ஆா்.எம். துரைசாமி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் ஆகியோா் பங்கேற்று, கட்டனாச்சம்பட்டி , அத்திப்பழகனூா், புதுப்பாளையம், கல்லாங்குளம், மூலக்காடு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 103 மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு அடையாள அட்டைகள் வழங்கினா்.
இதில் பேசிய அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா், தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் மகளிா் அதிக அளவில் பயனடைந்து வருகின்றனா். குறிப்பாக பெண்கள் நலனைக் கருத்தில் கொண்டு முதல்வா் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறாா். இதனை அனைவரும் பயன்படுத்தி வாழ்க்கையில் உயர வேண்டும் என்றனா். இதில் அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மாப்பிள்ளை பொண்ணு!

100% வாக்குப் பதிவு: இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

வாக்களிக்க மாற்று புகைப்பட ஆவணங்கள் சமா்ப்பிக்கலாம்

மணிமேகலை விருதுக்கு தோ்வான மகளிா் குழுவினருக்கு பாராட்டு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


