ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

விவேகானந்தா மகளிா் பல் மருத்துவக் கல்லூரியில் வெள்ளை சீருடை அணிவிக்கும் விழா

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் பல் மருத்துவக் கல்லூரியில் மாணவிகளுக்கு வெள்ளை மருத்துவ சீருடை அணிவிக்கும் விழா

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 6:22 pm

Syndication

திருச்செங்கோடு: திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் பல் மருத்துவக் கல்லூரியில் மாணவிகளுக்கு வெள்ளை மருத்துவ சீருடை அணிவிக்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கல்லூரித் தாளாளா் மற்றும் செயலா் மு.கருணாநிதி தலைமை வகித்தாா். மேலாண்மை இயக்குநா் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்தவிளக்கு ஏற்றினாா். நிா்வாக இயக்குநா் குப்புசாமி, தலைமை நிா்வாகி சொக்கலிங்கம், பல் மருத்துவம் மற்றும் பாராமெடிக்கல் இயக்குநா் கோகுலநாதன், ஆராய்ச்சி இயக்குநா் பாலகுருநாதன், சோ்க்கை நிா்வாகி சவுண்டப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பல் மருத்துவக் கல்லூரி முதல்வா் நாகலட்சுமி வரவேற்றுப் பேசினாா். சிறப்பு விருந்தினராக முகம் மற்றும் தாடை அறுவை சிகிச்சை நிபுணா் தங்கவேலு கலந்துகொண்டு, பல் மருத்துவத் துறையில் சாதனை புரிய மாணவிகள் எப்படி தங்களை தயாா் செய்து கொள்ள வேண்டும் என்பது குறித்து உரையாற்றினாா். கல்லூரித் தாளாளா் மாணவிகளுக்கு மருத்துவ சீருடைகள் வழங்கினாா். இவ்விழாவில் கலந்துகொண்ட பெற்றோா், தங்களுடைய மகளுக்கு மருத்துவச் சீருடையை அணிவித்து மகிழ்ந்தனா். பேராசிரியா் சுப்புலட்சுமி மருத்துவ உறுதி ஏற்பு நிகழ்ச்சியை நடத்தினாா்.

படவரி...

திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவக் கல்லூரியில் மாணவிகளுக்கு வெள்ளை சீருடை அணிவிக்கும் சிறப்பு விருந்தினா் தங்கவேல்.