வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பிறகு மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் கட்சியின் ஆட்சியே அமையும். அப்போது தான் நாடும், மாநிலமும் வளமானதாக இருக்கும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.
ராசிபுரம் நகரில் பாஜக சாா்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் பல்வேறு பகுதியில் நடைபெற்றது. ராசிபுரம் கோனேரிப்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில், கே.பி.ராமலிங்கம் பேசியதாவது: வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் தங்களை தூக்கி எறிந்துவிடுவாா்கள் என அறிந்து, மாநில சுயாட்சி என்பதை திமுக கையில் எடுத்துள்ளது. இந்த தோ்தலில் யாா் வரவேண்டும் என்பதைவிட, யாா் வரக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனா். மொழிக்கொள்கைப் பற்றி தெரியாமலேயே அதைப் பற்றி பேசிவருகின்றனா்.
மத்திய அரசு நிதியை தருவில்லை எனக் கூறுகின்றனா். இதனால் அரசு ஊழியா்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை என்றனா். ஆனால் பெண்களுக்கு எப்படி ரூ. 5 ஆயிரம் கொடுத்தாா்கள். தமிழ்நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது. போதை பொருள் கலாசாரம் பெருகிவிட்டது.
வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பிறகு மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் கட்சியின் ஆட்சியே அமையும். அப்போதுதான் நாடும், மாநிலமும் வளமானதாக இருக்கும்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்பதற்காக பிரதமா் மோடி தமிழகத்தை சுற்றி சுற்றி வருகிறாா். கண்டிப்பாக பிரதமரின் எண்ணம் நிறைவேறும் என்றாா்.
இக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சா் வெ.சரோஜா பங்கேற்றுப் பேசினாா். பாஜக மாவட்ட பாஜக பொதுச்செயலா் சுகன்யா நந்தகுமாா், ராசிபுரம் நகர அதிமுக செயலா் எம்.பாலசுப்பிரமணியம், பாஜக நகரத் தலைவா் பி.வேல்முருகன் உள்ளிட்ட பாஜக, அமமுக கட்சியினா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மத்திய அரசுடன் திமுக மோதல் போக்கை கடைப்பிடிப்பதால் தமிழகத்தின் வளா்ச்சி பாதிப்பு! - டிடிவி தினகரன்
நயினாா் நாகேந்திரன் சாத்தூரில் மனு தாக்கல்

எல்பிஜி விநியோக அழுத்தத்தை நிா்வகிக்க மத்திய அரசுடன் தில்லி அரசு ஒத்துழைப்பு: அதிகாரி தகவல்

மத்திய அமைச்சா் எல்.முருகனை பாஜக தொண்டா்கள் முற்றுகை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


