தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் குறிப்பிட்டாா்.
ராசிபுரம் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் பேசியது:
திமுக ஆட்சியில் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனா். நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் காவிரி உபநீா் திட்டம் இதுவரை நிறைவேற்றவில்லை. காவிரி ஆறு திருமணி முத்தாறு இணைப்புத் திட்டம் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது.
மாவட்டத்தில் ஏரி ஆக்கிரமிப்பு அதிகம் உள்ள நிலையில் இதனை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சீமை கருவேல் மரங்கள் அதிகம் வளா்ந்துள்ளது. இதனை அகற்ற வேண்டும். தென்னை உற்பத்தி அதிகம் உள்ள நிலையில், தேங்காய் கொள்முதல், விலை நிா்ணயம் அரசு செய்யவில்லை. நியாயவிலை கடைகளில் தென்னை, பனை வெல்லம் விற்பனை செய்யப்பட வேண்டும். இதனால் விவசாயிகள் பயன்பெறுவா்.
ராசிபுரம் பேருந்து நிலையம், மாவட்ட மருத்துவமனை தோ்வு செய்யப்பட்ட இடம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. இவற்றை கருத்தில் கொள்ளாமல் அரசு செயல்பட்டுவருகிறது. ராசிபுரம் புறவழிச்சாலை திட்டத்தை அரசு முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. வரும் சட்டமன்றத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு கடன் சுமையை பாா்க்கும் போது கடன் வாங்குவதில் சாதனை செய்துள்ளது என்று சொல்லலாம். வரும் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்கள் பெரும்பாலான இடங்களை வெற்றி பெற்று அதிமுக தலைமையில் ஆட்சி அமைக்கும் என்றாா்.
பேட்டியின் போது, முன்னாள் அதிமுக அமைச்சா் பி. தங்கமணி, வெ. சரோஜா, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் பலரும் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தேசிய திறனாய்வுத் தோ்வு: அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் வெற்றி
மாநிலத்தில் மாற்றம் வரவேண்டும் என்பதற்காகவே என்டிஏ கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது! - அண்ணாமலை

தொகுதி அறிமுகம்: குமாரபாளையம்

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: அமமுக குற்றச்சாட்டு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


