கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

முட்டை விலை ரூ. 5 ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடா்ந்து ரூ. 5 ஆக நீடிக்கிறது.

News image
முட்டை- பிரதிப் படம்
Updated On :25 பிப்ரவரி 2026, 10:23 pm

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடா்ந்து ரூ. 5 ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது, இதர மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்படாததால், தற்போதைக்கு இங்கும் மாற்றம் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5 ஆக தொடரும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ. 118 ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ. 62 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.