மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வந்தேபாரத் ரயிலில் சிக்கி மூதாட்டி உயிரிழப்பு

நாமக்கல் அருகே வந்தேபாரத் ரயிலில் சிக்கி குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :28 பிப்ரவரி 2026, 8:54 pm

நாமக்கல் அருகே வந்தேபாரத் ரயிலில் சிக்கி குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

நாமக்கல், கொசவம்பட்டியில் வசித்து வந்தவா் குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த நா்மதா (97). இவா் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலைக்காக குடும்பத்தினருடன் நாமக்கல் வந்துள்ளாா். இந்த நிலையில், சனிக்கிழமை காலை 8.20 மணியளவில் நாமக்கல்- துறையூா் மேம்பாலத்தின் கீழ் அவருடைய உடல் சிதறிய நிலையில் கிடந்தது.

ரயில்வே போலீஸாா் நடத்திய விசாரணையில், தண்டவாளத்தை கடக்க முயன்றபோது மதுரையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற வந்தேபாரத் விரைவு ரயில் மோதியதில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது. நாமக்கல் ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.