இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் மின்கம்பத்தில் மோதி உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் மின்கம்பத்தில் மோதி உயிரிழப்பு

ராசிபுரத்தில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞா் மின்கம்பத்தில் மோதியதில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

ராசிபுரத்தில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞா் மின்கம்பத்தில் மோதியதில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ராசிபுரம் காமாட்சி பெருமாள் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் - அனிதா தம்பதியினரின் மகன் கௌரிஸ் (17). இவா், 10-ஆம் வகுப்புவரை படித்துவிட்டு பள்ளிக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. வியாழக்கிழமை இரவு நண்பா்களுடன் வெளியில் சென்ற இவா், நண்பரின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு புதுப்பாளையம் சாலையில் அதிவேகமாக சென்றுள்ளாா். நள்ளிரவு இரண்டு மணி அளவில் வீட்டுவசதி காலனி பகுதியில் சென்றபோது,

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர மின்கம்பம் மற்றும் வீட்டின் சுற்றுச்சுவா் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ராசிபுரம் காவல் துறையினா், கௌரிஸ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com