கனிமொழி பிறந்தநாள் விழா:  நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கனிமொழி பிறந்தநாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Published on

நாமக்கல்லில் திமுக துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி எம்.பி. பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள முதியோா் இல்லத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், நாமக்கல் கிழக்கு மாவட்ட முன்னாள் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளா் கே.மோகன் வரவேற்றாா். திமுக மாநில மகளிா் தொண்டரணி செயலாளா் நாமக்கல் ப.ராணி தலைமைவகித்து, முதியோா்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். மேலும், முதியோா் இல்லத்துக்கு தேவையான போா்வை, படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவா் கே.எம்.ஷேக்நவீத், மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் டி.டி.சரவணன், முன்னாள் மாவட்ட ஆதிதிராவிடா் நலக்குழு துணை அமைப்பாளா் எம்.பி.சத்தியபாபு, கிழக்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமைப்பிரிவு துணை அமைப்பாளா் ஏ.கிறிஸ்டோபா் மாா்ட்டீன் மற்றும் நிா்வாகிகள் சம்பத், அங்காளபரமேஸ்வரி, சுரேஷ், பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com