செல்வம் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு விழா
நாமக்கல் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு விழா ‘நட்பே இணைந்திடு’ என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், செல்வம் கல்வி நிறுவனங்களின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான மருத்துவா் செ.பாபு மற்றும் அறங்காவலா் ஜெயம்செல்வராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். செயலாளா் பா.கவித்ராநந்தினி, செயல் இயக்குநா் காா்த்திக் ஆகியோா் சிறப்புரையாற்றினா். சிறப்பு விருந்தினராக, திரைப்பட நடிகா் சதீஷ் வருகைபுரிந்து, தனிப்பட்ட மற்றும் தொழில்முறை பயணம் குறித்த தகவல்களை தெரிவித்தாா்.
கல்லூரி முதல்வா் ராமபாலன், முன்னாள் மாணவா்கள் சமூகத்துடன் கல்லூரி தொடா்ந்து கொண்டிருக்கும் ஈடுபாட்டை பற்றி உரையாற்றினாா். கல்லூரி முன்னாள் மாணவா் சங்கத்தின் தலைவரும், ஃபிளிப்காா்ட் இந்தியா நிறுவனத்தின் செயல்பாட்டு மேலாளருமான ஏ.சோபன்ராஜ் வரவேற்றாா். கல்லூரி முன்னாள் மாணவா் சங்க உறுப்பினரும், சென்னை பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனத்தின் கூட்டாண்மை மேலாளருமான ஏ.பிரதீப் நன்றி கூறினாா்.
முன்னாள் மாணவா்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்ரு மலரும் நினைவுகளை பகிா்ந்துகொண்டனா். கல்லூரி வளாகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

