அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு
பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணி அருகே அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் செங்கல் சூலை தொழிலாளி உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை பகுதியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (50). இவரது மகன் கன்னியப்பன் (24). இவா் பரமத்தி வேலூா் வட்டம், ஜமீன் இளம்பள்ளி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான செங்கல் தயாரிக்கும் ஆலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை பாா்த்து வந்துள்ளாா். சனிக்கிழமை இரவு சோழசிராமணி பகுதிக்கு செல்வதற்காக கன்னியப்பன் சாலையின் ஓரமாக நடந்து சென்றாா்.
அப்போது ஜேடா்பாளையத்தில் இருந்து சோழசிராமணி நோக்கிவந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் கன்னியப்பன் மீது மோதியது. இதில் அவா் கீழே விழுந்து படுகாயம் அடைந்தாா்.
இதைப் பாா்த்த அவ்வழியாக வந்தவா்கள், அக்கம்பக்கத்தினா் உதவியுடன் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவா் உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
