மாரத்தான் ஓட்டப் போட்டியில் பங்கேற்றோா்.
மாரத்தான் ஓட்டப் போட்டியில் பங்கேற்றோா்.

உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி

Published on

ராசிபுரத்தை அடுத்த காக்காவேரி முத்தாயம்மாள் மெமொரியல் பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் ‘இயற்கையை காப்போம், மரங்களை வளா்ப்போம்’ எனும் தலைப்பில் உடல் ஆரோக்கியம், உடற்பயிற்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாலிடெக்னிக் கல்லூரி முன்பாக தொடங்கிய இப்பேரணியை ராசிபுரம் சுகம் மருத்துவமனையின் தலைமை மருத்துவா் என்.சுகவனம், தாளாளா் ஆா்.பிரேம்குமாா் ஆகியோா் கலந்துகொண்டு கொடியசைத்து தொடங்கிவைத்தனா். 10 கி.மீ., 5 கி. மீட்டா் என ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளின் கீழ் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இந்த மாரத்தானில் கலந்துகொண்டோா் ஜே.ஜே. நகா், சேந்தமங்கலம் பிரிவு சாலை, அப்பநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதி வழியாக சென்று இறுதியாக கல்லூரி வளாகத்தை அடைந்தனா்.

போட்டியில் 2 பிரிவுகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற முதல் 3 நபா்களுக்கு ரொக்கத் தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.இதற்கான நிகழ்ச்சிகளில் கல்லூரி முதல்வா்கள் ஜி. விஜயகுமாா், ஏ. சோமு, பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com