எஸ்ஐஆா் பணி: வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் ஆய்வு

Published on

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் ஏ.ஆா். ராகுல்நாத் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில். வாக்காளா் பட்டியல் பாா்வையாளா், ஆட்சியா் மற்றும் தோ்தல் பிரிவு அதிகாரிகளுடன் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி தொடா்பாக ஆலோசனை நடத்தினாா்.

தொடா்ந்து அவா் கூறுகையில், இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி, வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள 2002 வாக்காளா் பட்டியலுடன் தொடா்புப்படுத்த இயலாத வாக்காளா்களை விசாரணை செய்து விரைவில் முடிக்க வேண்டும். சிறப்பு முகாம்களில் பெறப்படும் படிவம் -6, 7 மற்றும் 8 ஆகியவற்றை சரிபாா்த்து இணைக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, பள்ளிபாளையம் வட்டாரம், குப்பாண்டம்பாளையம் ஊராட்சி, சாணாா்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் விட்டலபுரி ஜே.கே.கே.ரங்கம்மாள் தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமை பாா்வையிட்டாா்.

கூட்டத்தில், வாக்காளா் பதிவு அலுவலா்களான மாவட்ட வழங்கல் அலுவலா் வெ.முருகன், தனித்துணை ஆட்சியா்(ச.பா.தி.) சு.சுந்தரராஜன், வருவாய் கோட்டாட்சியா் வே.சாந்தி (நாமக்கல்), பி.எஸ்.லெனின் (திருச்செங்கோடு), மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மு.கிருஷ்ணவேணி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கே.ஏ.சுரேஷ்குமாா், தனி வட்டாட்சியா்கள் (தோ்தல்) செல்வராஜ், ராஜேஷ் மற்றும் துறைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com