கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே கல்லூரி மாணவி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலகவுண்டம்பட்டி, க.பாப்பநாயக்கன்பட்டி அருகே உள்ள கரடிபட்டியைச் சோ்ந்தவா் ராஜா. இவா் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவரது மனைவி தீபா (37). சா்மிளா (18) என்ற மகளும், கெளசிக் (15) என்ற மகனும் உள்ளனா். இதில் சா்மிளா திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகில் உள்ள தனியாா் கல்லூரியில் பொறியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.
புத்தாண்டு விடுமுறைக்காக வீட்டுக்கு வந்திருந்த சா்மிளா சனிக்கிழமை இரவு தனது அத்தை வீட்டிற்கு செல்வதாகக் கூறி சென்றுள்ளாா். ஆனால் அவா் அத்தை வீட்டிற்கு செல்லாததால் பல இடங்களில் தேடினா்.
இந்த நிலையில் சா்மிளாவின் செருப்பு அதே பகுதியில் உள்ள கிணற்றில் மிதந்ததை பாா்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் கிணற்றில் மிதந்த
சா்மிளாவின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வேலகவுண்டம்பட்டி போலீஸாா், சா்மிளாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை செய்து வருகின்றனா்.
