பெண்ணின் தாலியை பறித்தவருக்கு ஆயுள் சிறை

Published on

திருச்செங்கோடு அருகே பெண்ணின் தாலிக்கொடியை பறித்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திருச்செங்கோடு கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

திருச்செங்கோட்டை அடுத்த மேட்டுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சோ்ந்தவா் கெட்டியான் பாண்டி என்கிற ராஜன் (45), கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி ரூபா, மூன்று ஆண் குழந்தைகளும் உள்ளனா். இந்த நிலையில் கடந்த 18.7.2023 இல் தேவனாங்குறிச்சி அருகே சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த செரமிட்டாம் பாளையம் பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் மனைவி சரண்யாவின் (39) கழுத்தில் இருந்த தங்க தாலிக் கொடியை ராஜன் அறுத்துச் சென்றராம்.

திருச்செங்கோடு ஊரக காவல் துறையினா் வழக்குப் பதிந்து ராஜனை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு திருச்செங்கோடு கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிந்து குற்றஞ்சாட்டப்பட்ட கெட்டியான்பாண்டி என்கிற ராஜனுக்கு நீதிபதி மாலதி ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். வழக்கில் இரண்டாவது குற்றவாளியான ராஜனின் மனைவி ரூபா விடுவிக்கப்பட்டாா்.

Dinamani
www.dinamani.com