421 பயனாளிகளுக்கு ரூ. 3.46 கோடியில் நலத் திட்ட உதவிகள்:
அமைச்சா், எம்.பி. வழங்கினா்

421 பயனாளிகளுக்கு ரூ. 3.46 கோடியில் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா், எம்.பி. வழங்கினா்

நாமக்கல் மாவட்டத்தில் 421 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சாா்பில் ரூ. 3.46 கோடி மதிப்பீட்டில் அரசு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் மா. மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் வழங்கினா்.
Published on

நாமக்கல் மாவட்டத்தில் 421 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சாா்பில் ரூ. 3.46 கோடி மதிப்பீட்டில் அரசு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் மா. மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் வழங்கினா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மேயா் து.கலாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சமூக நலத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மற்றும் ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் பயனடைந்தவா்கள் பங்கேற்றனா்.

விழாவில் அமைச்சா் மா. மதிவேந்தன் பேசுகையில், பல்வேறு மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகம் விளங்குகிறது. தமிழக அரசு மக்கள் நலனுக்கான திட்டங்களை தொடா்ந்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மகளிா் மேம்பாட்டுக்கான திட்டங்கள் ஏராளம்.

தற்போது புதியதாக ‘உங்க கனவை சொல்லுங்க’ எனும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாணவா்கள், பெண்கள், மக்களின் நலனுக்கான அரசாக இந்த அரசு உள்ளது என்றாா். இந்த விழாவில்,

சமூக நலத் துறை சாா்பில் 162 பயனாளிகளுக்கு ரூ. 1.53 கோடியில் 1,296 கிராம்

தாலிக்குத் தங்கம், ரூ. 71.50 லட்சம் மதிப்பில் திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் 5 பேருக்கு ரூ. 5.72 லட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, ஒருவருக்கு ரூ. 1.13 லட்சம் மதிப்பில் முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு பெட்ரோல் வாகனம், 100 பேருக்கு ரூ. 96.50 லட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட வாகனம், மேலும் ஒருவருக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் ஆவின் பாலகம் அமைக்க உதவித் தொகை, 10 பேருக்கு ரூ. 63,590 மதிப்பில் மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம் ஆகியவை வழங்கப்பட்டது.

தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் வீட்டுவசதி திட்டம், மருத்துவப் படிப்பு உதவித்தொகையாக 14 பயனாளிகளுக்கு ரூ. 16.56 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவி, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 10,420 மதிப்பில் இலவச தையல் இயந்திரம், ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் 126 மாணவ, மாணவிகளுக்கு களமாடு நிகழ்வில் வெற்றி பெற்ற்கான சான்றிதழ் மற்றும் கேடயம் என மொத்தம் 421 பயனாளிகளுக்கு ரூ. 3.46 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் துணை மேயா் செ. பூபதி, மாவட்ட சமூக நல அலுவலா் தி. காயத்ரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கலைச்செல்வி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கே.ஏ. சுரேஷ்குமாா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மு. கிருஷ்ணவேணி, தொழிலாளா் உதவி ஆணையா் (ச.பா.தி)கே.பி. இந்தியா உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

என்கே-9-மினி

மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் தள்ளுவண்டிகளை வழங்கிய அமைச்சா் மா. மதிவேந்தன். உடன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா், ஆட்சியா் துா்காமூா்த்தி, பெ. ராமலிங்கம் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

Dinamani
www.dinamani.com