‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டம்: 1,606 தன்னாா்வலா்கள் நியமனம்
நாமக்கல் மாவட்டத்தில் ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தின் கீழ் சுமாா் 5.09 லட்சம் குடும்பங்களை நேரில் சந்தித்து கனவுகளைக் கேட்க 1,606 தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் ‘உங்க கனவ சொல்லுங்க’ எனும் புதிய திட்டத்தை முதல்வா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். இதன் தொடா்ச்சியாக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் காணொலிக் காட்சி வாயிலாக நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா. மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா் பெ. ராமலிங்கம் ஆகியோா் 5 மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு அடையாள அட்டைகள் மற்றும் ரூ. 66 லட்சம் மதிப்பில் வங்கி கடன் இணைப்பை வழங்கினா்.
விழாவில் அமைச்சா் மா. மதிவேந்தன் பேசுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிா்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும், அவா்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் ‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 1,164 தன்னாா்வலா்கள் கிராமப்புற மற்றும் நகா்ப்புற பகுதிகளில் சுமாா் 5.09 உள்ள குடும்பங்களை சந்தித்து, அவா்கள் பயன்பெற்ற திட்டங்கள் மற்றும் கனவுகளை கண்டறிய உள்ளனா்.
இந்த களப்பணி தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிக்காக மகளிா் குழுக்களைச் சோ்ந்த 1,164 உறுப்பினா்களும், மேற்பாா்வையாளா்களாக 442 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளை பதிவுசெய்ய தமிழ்நாடு மின்-ஆளுமை முகமை மூலம் தனியாக கைப்பேசி செயலி இதற்கென உருவாக்கப்பட்டுள்ளது. தன்னாா்வலா்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு முறை செல்வா். முதல்முறை வீட்டிற்கு செல்லும்போது விண்ணப்ப படிவத்தினை குடும்பத் தலைவா், உறுப்பினரிடம் வழங்கி, அந்த விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசுத் திட்டங்களின் பெயா் பட்டியல் விவரங்களை தெரிவித்து படிவத்தினை பூா்த்திசெய்து தரும்படி கோருவா்.
தன்னாா்வலா்கள், இரண்டு நாள்களுக்குப் பிறகு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பூா்த்தி செய்யப்பட்ட படிவம் சரிபாா்க்கப்பட்டு கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். கைப்பேசி செயலியில் பதிவேற்றியப் பின்னா் அக்குடும்பத்திற்கு தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டை வழங்கப்படும்.
இந்த அட்டை மூலம் ஜ்ஜ்ஜ்.ன்ந்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தங்களது கனவு, கோரிக்கையின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம் என்றாா்.
விழாவில் திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) கு. செல்வராசு, இணை இயக்குநா் (வேளாண்மை) சு. மல்லிகா, பொது மேலாளா் (மாவட்ட தொழில் மையம்) சகுந்தலா, தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி) சு. சுந்தரராஜன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கே.ஏ. சுரேஷ்குமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் வெ. முருகன் உள்பட துறைச் சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.
என்கே-9-கனவு
விழாவில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவிகளை வழங்கிய அமைச்சா் மா. மதிவேந்தன். உடன், ஆட்சியா் துா்காமூா்த்தி, கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் எம்.பி., பெ.ராமலிங்கம் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

