திருச்செங்கோட்டில் முதல்தர கொப்பரை கிலோ ரூ. 192 க்கு விற்பனை

Published on

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க தலைமையகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்திர கொப்பரை ஏலத்தில் முதல்தர கொப்பரை கிலோ ரூ. 192 க்கு விற்கப்பட்டது.

ஏலத்துக்கு 16 மூட்டை கொப்பரைகள் வந்தன. இதில் முதல்தர கொப்பரை கிலோ ரூ. 170.10 முதல் ரூ. 192 வரையிலும், இரண்டாம் தரம் ரூ. 80.50 முதல் ரூ. 121 வரையிலும் விற்பனையானது. மொத்தம் ரூ. 82 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

அதேபோல மல்லசமுத்திரம் சங்கத்தில் நடைபெற்ற கொப்பரை ஏலத்திற்கு 28 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. முதல்தரம் ரூ. 120.10 முதல் ரூ. 182.35 வரையிலும், இரண்டாம் தரம் ரூ. 85.10 முதல் ரூ.117.10 வரையிலும் விற்பனையானது. மொத்தம் ரூ. 1.40 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.

Dinamani
www.dinamani.com