நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் சென்று வர ஆட்சியா் உத்தரவு
நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்குள், அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் சென்று வர ஆட்சியா் துா்காமூா்த்தி உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் வெளியில், போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் பொருட்டு மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக திருச்சி, துறையூா் மற்றும் இதர பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் ஜன.13 முதல் தற்காலிகமாக பழைய பேருந்து நிலையத்திற்குள் கடைவீதி பிரதான சாலை பழைய சிங்கப்பூா் ஸ்டுடியோ அருகில் உள்ள நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்து நேரக்காப்பாளா் அறை அருகில் உள்ள வாயில் வழியாக வெளியேற வேண்டும்.
பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, துறையூா் மற்றும் இதர பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் அனைவரும் பழைய பேருந்து நிலையத்தின் உள்புறம் இருந்தே பேருந்துகளில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
