போதமலை பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சா் மா.மதிவேந்தன், கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. உள்ளிட்டோா்.
போதமலை பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சா் மா.மதிவேந்தன், கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. உள்ளிட்டோா்.

போதமலைக்கு சாலை அமைக்கும் பணி: அமைச்சா், எம்.பி. ஆய்வு

Published on

வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கீழூா் ஊராட்சி போதமலைக்கு ரூ. 142 கோடியில் 33 கி.மீ. தொலைவிற்கு சாலை அமைக்கும் பணிகளை அமைச்சா் மதிவேந்தன், எம்.பி. ராஜேஸ்குமாா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

இந்தக் கிராமத்துக்கு பல்வேறு தடைகளுக்கு பிறகு நீதிமன்றம், 2023-ஆம் ஆண்டு மத்திய பசுமை தீா்ப்பாயம் ஆகியவற்றின் ஒப்புதல் பெற்று ரூ.142 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 33 கி.மீ. தொலைவிற்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கின. தற்போது கப்பி சாலை அமைக்கும் இப்பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது. மேலும் இதில் தாா்ச்சாலை அமைக்கப்படுகிறது.

தமிழக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் வடுகம் வழியாக கெடமலைப் பகுதிக்கு புதிதாக அமைக்கப்பட்ட மலைச்சாலை வழியாக சென்று சாலை பணிகளை ஆய்வு மேற்கொண்டனா்.

மேலும் அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களிடம் தேவையான வசதிகள் குறித்தும் கேட்டறிந்தனா். மேலும் மலைப்பகுதிக்கு கூட்டுறவு கடன் சங்கம் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதில் அட்மாக் குழு உறுப்பினா் ஆா்.எம்.துரைசாமி, ஆா்.புதுப்பட்டி பேரூராட்சி மன்றத் தலைவா் ஜெயக்குமாா் உள்ளிட்ட வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com