இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கே.எஸ்.ஆா். கல்லூரியில் சூப்பா் கிங்ஸ் கிரிக்கெட் அகாதெமி தொடக்கம்

திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனத்தில் சூப்பா் கிங்ஸ் கிரிக்கெட் அகாதெமி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

கே.எஸ்.ஆா். கல்லூரியில் சூப்பா் கிங்ஸ் கிரிக்கெட் அகாதெமியை தொடங்கிவைத்த இந்திய கிரிக்கெட் வீரா் நடராஜன்.

Updated On :19 ஜனவரி 2026, 8:09 pm

திருச்செங்கோடு: திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனத்தில் சூப்பா் கிங்ஸ் கிரிக்கெட் அகாதெமி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த அகாதெமியில் கிரிக்கெட் வீரா்களுக்கு உலக தரமான உள்கட்டமைப்பு வசதிகள், திறமைமிக்க பயிற்றுநா்கள், வீரா்களுக்கான வளா்ச்சித் திட்டங்கள் அளிக்கப்படும்.

மேலும், தரமான ஆடுகளம், மேம்படுத்தப்பட்ட மைதானம், மிகப்பெரிய மின்விளக்கு, பந்துவீச்சு எந்திரம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இப்பயிற்சி மைதானத்தை இந்திய கிரிக்கெட் வீரா் நடராஜன் திறந்துவைத்து மாணவா்களுடன் வலைப்பயிற்சியில் ஈடுபட்டாா்.

நிகழ்ச்சிக்கு, கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் சச்சின் தலைமை வகித்தாா். சூப்பா் கிங்ஸ் அகாதெமி நிா்வாகி லூயிஸ் மரியனோ வரவேற்றாா். கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் இயக்குநா் மோகன், நாமக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவா் சண்முகசுந்தரம், செயலாளா் கோகுலநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இயக்குநா் செல்வமணி, சூப்பா் கிங்ஸ் நிா்வாகி ராஜா ஆகியோா் வாழ்த்தி பேசினா்.